இராமனின் மேனி அழகு - அறுசீர் ஆசிரிய விருத்தம்

கம்பனின் இராமாயணத்தை வாசித்து அறிந்தவர்கள்
இப்பாடலின் சீர் பிரித்து, வாய்பாடும், அடி எதுகையும்,
என்ன வகை பாடலென்றும் சொல்ல வேண்டும்.

அவலோகிதத்தில் பதிந்தும் உறுதி செய்யலாம்.

இராமனின் மேனி அழகு

தோள் கண்டார். தோளே கண்டார்.
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்;
தடக் கை கண்டாரும். அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே.
வடிவினை முடியக்கண்டார்?-
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்! 19

- உலாவியற் படலம், பால காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-23, 7:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே