எந்தன் உயிர் காதலியே

எந்தன் உயிர் காதலியே

நீல வானில்
நிலவாய் உலாவரும்
வெண்ணிலவு தான்
இந்தப் பெண்நிலவோ...!!!

துடித்துப் பறக்கும்
பட்டாம்பூச்சியாய் மைவிழிக்
கொட்டிச்சிரிக்கும் வண்ணப்
பதுமையோ....!!!

சீரிய சிந்தையுடன்
நிமிர்ந்த நன்நடைபழகும்
பாரதிகண்ட புதுமைப்
பெண்ணோ...!!!

வினாடியும் வீனாகாமல்
பாரெல்லாம் பறந்து
மானுடர்ச்சிந்தை தெளிவிக்கும்
சிகரமோ....!!!

எடுப்பாள் ஆயிரம்வுரு,
நிகழும் அதிசயங்கள்,
பாரெல்லாம் புகழுமந்த
பூவிதழை....!!!

புல்லரிக்கும் என்னுயிர்
அவளது பெருமையில்,
விழிதுளிர்க்க ஆனந்திக்கும்
ஆழ்மனது....!!!

என்னுள் பொதிந்த
புன்னகையும் அவளே,
என்னுள் உலவும்
சுவாசமும் அவளே,
அவளின்றி நானில்லை...!!!

எழுதியவர் : கவிபாரதீ (10-Apr-23, 10:13 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 533

மேலே