காதல் கிறுக்கன்

சுட்டதும் சுடாததும்
பட்டதும் படாததும்
எண்ணமாய் எழுத்துமாய்
இன்னும் எல்லாமாய்
அத்தனையும் உனக்கு
நான் அள்ளி அள்ளி
தந்தேன் இன்னும்
என்ன தரவேண்டுமோ
தெரியலையே நீயே
சொல்வாயோ எந்தன்
காதல் கிளியே
உந்தன் கிறுக்கனாய்
உன்னடியில் இங்குநான்

எழுதியவர் : வான்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Apr-23, 10:54 am)
Tanglish : kaadhal kirukan
பார்வை : 159

மேலே