என்றுமே அகதி

என்றுமே அகதி.

" நான் என் ஊருக்கு போகவேண்டும் " எத்தனை தரம் பாலன் தனக்குள் இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்கிறான்?
அது கடவுளுக்குத்தான் தெரியும்!
சமீபத்தில் இந்த "நான் என் ஊருக்கு போகவேண்டும் " என்பது அவனது ஆத்மாவின் அழுகை யாகவே ஆகிவிட்டது. எத்தனை பேர் அவனைப் போல் இவ்வுலகில்?
ஆனால் அவர்களால் ஏன்
இன்னும் ஊர் திரும்ப
முடியவில்லை? அதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கலாம் !
சிலது நியாயமானது, மற்றவை வெறும் கற்பனை. ஆனால்
எது எப்படி இருந்தாலும்
இந்த ஆன்மாக்கள் எல்லாம் கூட்டுக்குள் அகப்பட்ட பறவைகள்.

இறைவன் படைப்பில் மீன் (fish) "சால்மன்" மிகவும் அதிர்ஷ்டம் செய்தது. அது தன் பிறந்த இடத்திற்கே திரும்புகிறது அதன் கடைசி மூச்சுக்கு.
ஆனால் பாவம், பாலனும்
பாலனைப் போன்ற மற்றவர்களும்
தங்கள் கடைசி மூச்சு எங்கே?
என்று ஏங்கி மௌனமாக
கண்ணீர் விடுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் என்றுமே
அகதிகள். அவர்களுக்காக
நாம் எல்லோரும் ஒரு நிமிடம்
மௌனம் காப்போம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (29-Apr-23, 10:01 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : endrumey agathi
பார்வை : 64

மேலே