நீயும் உன் நினைவுகளும் மறக்கமுடியாதவை 555
***நீயும் உன் நினைவுகளும் மறக்கமுடியாதவை 555 ***
ப்ரியமானவளே...
மேனியில் ஏற்படும் காயம்
சில நாட்களில் ஆறிவிடும்...
உள்ளத்தில்
ஏற்படும் காயம்...
உயிர் உள்ளவரை
ஆறாத ரணமடி...
என் உயிரே நீதான்
என்றாய் சந்தோஷப்பட்டேன்...
உயிர் பிரிவது
எப்போது என்று தெரியாமலே...
என் பிரிவின் வலியை
நீ உணராதவரை...
அர்த்தமற்றதாகவே இருக்கும்
என் அன்பு உனக்கு...
பூவுலகில் நீ இன்றி வேறு
பெண் இலலாமல் இல்லை...
உன்னையும்
உன் நினைவுகளையும்...
மறக்க முடியாததால்
உன்னையே சுற்றுகிறேனடி நான்...
என்னருகில் நீ
இல்லாமல் போகலாம்...
உன் நினைவுகளை
சுமக்கும் சுமைதாங்கியாய்...
உன் நினைவுகளோடு வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன் நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***