இடையசைத்து இளவேனில் தென்றலாய்நீ

இடைஇடையே இதழிழ் விரித்துநீ
மெல்லச் சிரிக்கையில்
இடையசைத்து இளவேனில் தென்றலாய்நீ
மெல்ல நடக்கையில்
உடையில் வடக்கு தெற்கென விதவிதமாய்நீ
நடந்து வருகையில்
கடைவிழியில் அந்திக்கதைநீ சொல்கையில்
புனைகிறேன் புதுக்கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (5-May-23, 10:00 am)
பார்வை : 89

மேலே