ஹைக்கூ 2
1.
இல்லற வாழ்க்கை/
செழிப்பாய் இருக்கிறது/
குழந்தை பாக்கியம்/
2.
கோடை வெப்பம்/
அதிகமாய் இருக்கிறது/
தண்ணீர் தாகம்/
3.
வளர்ச்சிகளின் உச்சம்/
உயர்ந்துகொண்டே செல்கின்றன/
விவசாயியின் ஏக்கம்/
4.
இருளும் ஒளியும்/
மாறி மாறி வருகின்றது/
மின்மினிப் பூச்சி/
5.
ஆற்று நீர்/
அழகாய் ஓடுகின்றது/
பழைய நினைவு/
6.
மின்னும் நட்சத்திரங்கள்/
வானில் உலா வருகின்றன/
மின்மினிப் பூச்சிகள்/
7.
மேளச் சத்தம்/
முழங்கிக் கொண்டிருக்கின்றது/
பசித்த வயிறு/
8.
குப்பை மேடு/
உயர்ந்துகொண்டே செல்கிறது/
சுகாதாரக் கேடு/
9.
சலசலக்கும் அருவி/
குளிர்ச்சியாய் இருக்கிறது/
மழலையின் சிரிப்பு/
10.
பூக்களின் வாசங்கள்/
மனதை மயக்கச் செய்கின்றன/
மாணவர்களின் குறும்புகள்/
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா