நான் ஒரு சாதாரண மனிதன்

நீ ஒரு சாதாரண மனிதன் தான்
ஆமாம், நான் ஒரு சாதாரண மனிதன் தான்!

நீ ஒரு சாதாரண கணவன் தான்
ஆமாம் நான் ஒரு சாதாரண கணவனே!

நீ ஒரு சாதாரண அப்பன் தான்
ஆமாம் நான் ஒரு சாதாரண அப்பனே!

நீ ஒரு முக்கியமான மனிதன் அல்லவே
ஆமாம் நான் ஒரு முக்கியமான மனிதன் இல்லை தான்!

பின்னர் , நீ ஏன் உன்னை ஒரு தனி மனிதன் என்று கருதுகிறாய்?
நான் பிற உயிர்களுக்குத் தெரிந்து தீங்கு செய்யாத மனிதன்!
இரக்கம் கருணை மனிதாபிமானம் கொண்டவன்
ஜீவகாருண்யம் கொல்லாமை கொள்கையுடன் வாழ்பவன்!

அது சரி, உன்னை ரொம்ப பெரிய மனிதனாக மெச்சிக் கொள்கிறாய். இதனால் உனக்கு என்ன ஆதாயம்?

ஜீவகாருண்யம் கொல்லாமை என்றால் என்ன என்பதை எடுத்துக் காட்டும் ஒரு அசாதாரண மனிதனாக நான் இருக்கிறேன்!
எவ்வளவோ ஜீவராசிகள் உணவுக்காக தினமும் கொல்லப்படினும், என்னால் சில ஜீவராசிகள் தினமும் உயிர் பிழைக்கிறது என்பது தான் என்னைப் போன்றவர்களால், பிற உயிர்களுக்கு ஏற்படும் ஆதாயம்!

இப்போதும் சொல்கிறேன், நான் ஒரு சாதாரண மனிதன் தான், ஆனாலும் அசாதாரணமான சாதாரண மனிதன்!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (22-May-23, 6:02 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 158

சிறந்த கட்டுரைகள்

மேலே