வெயில்

. வெயில்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

வெய்யிலுக்கும் மழைக்கும் மட்டும்
விடுமுறை விடும் மகேஷ் ஐயா
காத்துக் காலம் வரும் போது
கண் எல்லாம் மண் விழுது
பார்த்து கொஞ்சம் தனிக்கவனம்
பசங்களுக்காக செய்யப்பா...

பனிக்காலம் காய்ச்சலுன்னு
பையனாவே நின்னுக்குவான்
சளிக்காய்ச்சல் மோசமய்யா
சரியான நேரம் பார்த்து
விழிப்புணர்வா இருப்பதற்கு
விடுமுறையே விட்டுடலாம்.. .

என்ன தான் ஏத்தி இறக்கி
எடை போட்டு பார்த்தாலும்
வருட கணக்கில் லீவு விட்ட
வைரஸ் அண்ணா இருக்கையில
வாரக் கணக்கில் லீவு விட்ட
நீங்க ஒன்னும் பெரிசு இல்ல..

😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷

எழுதியவர் : க. செல்வராசு (7-Jun-23, 4:36 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : veyil
பார்வை : 37

மேலே