செவிலியர்
செவிலியர்
""""""""""""""""""
உறவுகளை மறந்து விட்டோம் விலைமதிப்பற்ற /
உயிர் காக்க பிறந்து விட்டோம் /
தூக்கத்தை கண்டதில்லை எமனிடம் தோற்றதில்லை/
துயரத்தில் வந்தவர்களை வார்த்தைகளால் மறக்கடிப்போம்/
உயிர் போகும் நேரத்தில் வந்தவர்களையும் /
உயிர் நாடி உயர்த்திடவே அயராது/
சிகிச்சையில் நலம் பெரும்வரை போரடுவோம்/
செய்திடும் பணியை சிறப்பாக செய்திடுவோம்/
தன்னலமற்ற உழைப்பில் பிறர் நலத்தை/
தெய்வமாக இருந்து பிணியின்றி காத்திடுவோம்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்