காதல் அமர தீபம்

தூய காதல் அணையா தீபம்
நீராலும் அணைக்க முடியாது அதை
வீசும் காற்றாலும் இத்தனை ஏன்
நம்மைக் கட்டுப்படுத்தும் காலத்தாலும் ;
காதலர் காலத்தால் இல்லாது போனாலும்
காதல் அழிவதில்லை அது என்றும்
அணையா அமர தீபம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Jun-23, 8:09 pm)
பார்வை : 75

மேலே