தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க!
வாழியநீ தமிழ்மகளே!
வளம்தரும் திருமகளே!
வற்றாத சொல்வளத்தால்
வான்புகழ் கொண்டவளே!

உனைதினம் ஓதுவாரை
உலகறிய செய்பவளே!
உள்ளத்தின் துடிப்பாக
உயிரோடு இணைந்தவளே!

செம்மொழியாய் சிறப்புற்று
செம்மாந்து நிற்பவளே!
காப்பியங்கள் பலதந்து
காசினியில் உயர்ந்தவளே!

தலைநிமிர்ந்து நீநின்று
கலைபலவும் வளர்த்தவளே!
தனிச்சிறப்பு பலபெற்று
இனிமைபல சேர்ப்பவளே!

புலம்பெயர்ந்த தமிழருக்கும்
புதுமைபல சேர்ப்பவளே!
தமிழினத்தை தினம்காத்து
தாங்கிவரும் திருமகளே!

மின்னுலகில் நாள்தோறும்
மின்மினியாய் உலவுகிறாய்
கணினிக்கும் நீபொருந்தி
கனிச்சாறாய் இனிக்கின்றாய்!

புதினமென்ற பூஉலகில்
புகுந்துபல படைப்புகளால்
பண்புநலம் குறையாம;ல்
பார்போற்ற பொலிகின்றாய்!

குலமகளின் நெற்றியிலே
குங்குமமாய் கொலுவிருந்து
நிலகளின் பெயர்காக்க
நித்தமொரு புகழ்சேர்ப்பாய்!

நிலவினிலும் உனைஎழுத
நினதாட்சி தினம்திகழ
நிலையான பூந்தமிழே!
நிலைபெற்று நீவாழ்க!

பாவலர். பாஸ்கரன்.

எழுதியவர் : பாவலர் . பாஸ்கரன் (18-Jun-23, 6:39 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 32

மேலே