காதல்தேசம் கயவரால் கறைபட்டது
கலி விருத்தம்
கொள்ளை செய்ததை கொண்டுசென் றானே
அள்ளக் கையவன் அண்ணனின் உதவி
விள்ளை. யாகவும் வீடுசேர்த். தயெம்பி
கொள்ளை யாயிது கூடிவெட். டுவோமே
விளக்கம்
நாட்டினைக் கொள்ளை யடித்து அண்ணன் வீடு சேர்த்தத்
தம்பி. இது கொள்ளை அல்ல வெட்டுவோம் விடு அவனை
நேரிசை வெண்பாக்கள்
எனக்குதவி செய்தானே எம்பி யவனை
பிணக்கென யேனோ பிடித்தாய் -- கணக்கில்லை
யாரைப் பிடிப்பதென்று யாரை விடுவதென்று
பாரையிது பாறைபெயர் பார்
விளக்கம்
என்க்குதவி செய்த தம்பியவனை என்ன தவறு செய்து
என்று பிடித்து விசாரிக்கிறார், பாறையை பிளக்கும்
கடப்பாரை நாங்கள். என்ன செய்கிறோம் பார்.
கொள்ளை எதைசெயினும் கொண்டு வடக்குசேர்ப்போம்
முள்ளங்கி பத்தை முதல்தந்தால் -- சள்ளையிலா
விள்ளை எமதென்போம் வீண்கேள்வி கேட்காதே
அள்ளல்வீ சுங்கும்பல் ஆம்
விளக்கம்
பால் விலை மின்சார விலை வீட்டு வரி ஏற்றம்
பஸ் டிக்கெட் ஏற்றம் பெட்ரோல் விலை ஏற்றம்
ஏன் நாங்கள் கட்டிய பாலம் உடைந்தால் கூட
மத்திய அரசின் மீது பழி சொல்வோம்.
நாங்கள் செய்த தவறை மத்திய அரசு செய்த்தென
குற்றம் சுமத்துவது திராவிட மாடல் ஆகும்.
தாழ்த்தப் பட்டோர்க்கு மத்திய அரசு வீடு கட்டி
தந்தால் அதற்கு பெரியார் சமத்துவ புரம் என்போம்
நாங்களே திறந்து வைத்தது திராவிடக் குழந்தை
களைக்குடி புகச்செய்வோம்,
ஆசிரியப்பா
அன்று காவல் காத்தவர் துறையை
இன்று ஏவல் நாயாய் எம்முன்
வாலை ஆட்டி காலை நக்க
கோலைப் பறித்து கொண்டோம் ரேஷன்
சாமான் மத்திய அரசு தந்திட
நாமே தந்தோம் என்றோம் பாரு
குடியினை கொடுத்தோம் கொள்ளை செய்தோம்
நீதியை தலைக்குனி யவைத்தோம்
சாதக தீர்ப்பினை எழுதச் செய்தோம்
திராவிடம் எனும்பொய் யைபரப் பியயாம்
கொள்ளையை திராவிட மாடலென் றோமே