ஈரம்

ஆழமாய் வேரோடி,
ஆலம் போலிருந்த
மனிதர் இனம்
மனதில் ஈரமும்,
ஒரே கூடுமாய்
வாழ்ந்த பாசப்
பறவைகள்.....

கலிமுற்றிய இந்நாளில்
விழுதுகள் வேரூன்றி
ஆணிவேரை மறந்து
தனிக்கூட்டினில் தனித்து,
மனதின் "ஈரம்"
அற்று எந்திரமாய்
வாழ்கிறது.....

"ஈரம்" வற்றிய
நெஞ்சம் வெடித்தது
பாலம் பாலமாய்
பணம் வந்து
பகட்டாய் அடைத்தது
வெடிப்புகளை....

எழுதியவர் : கவிபாரதீ (26-Jun-23, 7:01 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : eeram
பார்வை : 76

மேலே