உனைக் கண்டு மயங்குகிறேன்
உனைக் கண்டு மயங்குகிறேன்
××××××××××××××××××××××××××××
மாங்கனி வடிவழகே மரகத நிறத்தழகே
தங்கக் குணமழகே தக்காளி உதட்டழகே
சிங்க வீரமழகே சிரிக்கும் மாதுளையே
வங்கக்கடலலையாக வாரிச் சுருட்டும் நடையழகே
உனைக் கண்டு உருக்குலைந்து மயங்குகிற
எனைத் தாங்கிட ஏங்குகிறேன் வருவாயா
சுனையாகக் காதல் சுகத்தை தருவாயா
மோனை எதுகையாக முத்தங்களை தெரிக்கவிடுவாயா
காதல் மொழி கவிதை எழுதியே
ஆதாம் ஏவாள் அதிசயப் பழம்போலே
பதமாக அழகாக பாமாலை தொடுத்து
பாதம் போற்றியே பணிகிறேன் காதலியே
கடலில் மூழ்கா கடல் நிலவாக
உடல் கலந்தும் ஊடலில் விலகுவதேன்
கூடல் நிகழும் குழந்தை மனதானால்
தொடாது இருந்திட தொடருமா இல்வாழ்க்கை?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

