ஓவியம் எழுதி எழுதி

ஓவியம் எழுதி எழுதி ஓயவில்லை கரங்கள்
தேவியுன் இதழெழுதும் போது புன்னகை முத்துக்கள்
ஓவியத்தின் உள்ளே உருண்டிடும் இன்னிசை ஓசை
ஆவியுள் புகுந்து ஆனந்த ராகம் பாடுதடி
ஓவியம் தீட்டிநான் ஓயவில் லைஉன்னை தூரிகையால்
தேவி இதழெழு தும்போதில் புன்னகை முத்தனைத்தும்
ஓவியம் தன்னில் உருண்டிடும் மெல்லிய ஓசையெலாம்
ஆவியுள் ளேபுகுந் தானந்த ராகத் தினைப்பாடுதே