1000 ரூபாய் நோட்டு
1000 ரூபாய் நோட்டு
××××××××××××××××××
குணம் அற்றாலும் கூடிவரும் நட்பு
பணம் இருந்திடப் பந்தமாகும் உறவு
கோணமாகச் சுற்றாரும் கோலாட்சுவர் நேயமிருக்க
பிணமானால் உற்றார் பெற்றார் யாவருமில்லையே..
அறம் ஒழுக்கம் அன்பு தர்மம்
துறந்திடுவர் ஆயிரம்
துட்டைக்(பணத்தை) கண்போர்
உறவானோர் தரகராக உரிய ஆயிரம் பெற்றே உதவினார் பயிற்சியில் சேர்ந்திடவே
அந்த...
ஆயிரத்தால் மாயமானது ஆயிரமாண்டு உறைவிடம்
பேயிக் கவிதா பிழையான இல்லாளான
நோயினைச் சுகமாக்க நோம்பினைக் கடைப்பிடிக்க
நாயின் துணையோடு நாதாரி ஆனேனே
இரத்த உறவு இழிவு பேசிட
இரக்க மற்றோர் இருப்பிடம் தகாது
உரக்கமற்று வெளி ஊர் பயணிக்க
வரமான தொழிலால் வருடம் இருபத்தாறு
மருத்துவ ஆய்வகப் பணியில்
வெற்றிப் பயணத்தை தொடர்கிறேன்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்கியராஜ்