புத்தாடையின் மனமும் மனமும்

புத்தாடையின் மனமும் மனமும்
()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஆண்டுக்கொருப் புத்தாடை
அன்றையக் காலத்தில்
ஆலயத் திருவிழாவுக்கே
அப்பா புத்தாடை வாங்கித்தர

மழைகண்ட மண்போல
மனமெல்லாம் மத்தாப்புதான்
புத்தாடை மனத்தில்
புத்துயிரும் பிறந்திடும் மனமே

ஆண்டுக்கு ஒரு ஆடைதான்
அவ்வாண்டு முழுமைக்கும் உடையது தான்
திருவிழாவுக்கு வாங்கிய ஆடைதான்
தீபாவளிக்கும்..பொங்கலுக்கும் புத்தாடை

ஆறு மாதம் கடந்திருக்கும்
அஞ்சல் பெட்டியாக தொங்ககிருக்கும்
கால்சட்டையின் பின்னே கிழிந்திருக்கும்
ஒட்டுப்போட்டு உடுத்திடுவோம்
ஒய்யாரமாக நடந்திடுவோம்

இதைக் கண்டு
இகழ்வாரை அப்போது கண்டதில்லை
இன்றோ நாகரிக வளர்ச்சியில்
இன்று அணிந்ததை மறுதாள் அணிந்தால்
இழிவாக பேசியே பல்லையும் இழித்திடுவர்

அன்று போல்தான்
இன்றும் ஆண்டுக்கு
ஒரு உடைதான்..

சிகரெட் அடிப்பவனை பந்தாவாகவும்
கடலை மிட்டாய் சாப்பிடுபவனை
தாழ்ந்தவனாக பார்க்கும்
இந்த சிந்தனை கொண்ட

இந்த உலகத்தார் என்
எளிமையைக் கண்டு இழித்துரைப்போரை
எளிமையாகவே கடந்திடுவேன்...

கடிணம்தான் எளிமை -ஆனால்
கட்டணம் தேவையில்லை
கட்டுப்பாடு போதும்
கட்டுபடி ஆகிறது
கண்டபடி செலவில்லததால்...

தொடரும்....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (6-Jul-23, 6:08 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 291

மேலே