முதுமை

முதுமை
×××××××
முதுமை மீண்டும் குழந்தை
பதுமை மேனி யெங்கும்
புதுமை சுருக்கமானக் கல்வெட்டு
பழமை கதைகள் பல சொல்லும்..

ஆணவம் கோபம் தீமிர்யாவும்
குணமாகிக் கருப்பு வெளுத்திருக்கும்
காணவேண்டியவைகளை காணாதும் காணவேண்டாததை
கண்டக் கண்கள் இருண்டு இருளயிருக்கும்..

மரத்தை அழித்தக் கரங்களை
மரக்கைத்தடித் தாங்கி நிற்கும்
இரக்கம் மற்ற இதயத்துள்
இரத்தம் நாளம் அடைத்திருக்கும்..

புகையால் பூமியின் மூச்சை நச்சாக்கியப்
பகைவர்கள் சுவாசாம் குறைந்திருக்கும்
நகைத்துப் புன்னகைத்த நால்
வகைப் பற்களும் உதிர்ந்திருக்கும்

நற்சொல் உரையாத நாக்கு
நாவண்ணம் இழந்து  உளண்டியிருக்கும்
நற்காரியங்கள் புரியாதிர்ந்த உடல்யாவும்
நாற்காலியில் செயலற்றே கிடக்கும்

இறுதியில் பணம் பதவியெல்லாம்
ஒரு ரூபாய் மதிப்பில் சடலமாகும்
உறுதிக் கொள் மனிதனே
உயிர் உள்ளவரை உதவிக்கரம் நீட்டிட..

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (6-Jul-23, 8:19 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : muthumai
பார்வை : 423

மேலே