1980 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழாபாகம் 2
'80 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா...பாகம் :2
கவுறு குத்து,கம்பு குத்து,பூ மிதித்தல்,தலையில் தேங்காய் உடைத்தல் ,தொட்டில் காவடி போன்ற நேர்த்திக்கடன் செலுத்தாத சைவ திருவிழா எங்கள் ஊர் அம்மன் கோவில் திருவிழா..
அப்படினா ..பெரியார் மண்ணா..? No..No..!
உலக வரலாற்றிலே தன் வாழ்வை, தன் இடம்,பொருளென எல்லாவற்றையும் ஏழைகளுக்கு வழங்கிய ஒரே மாமனிதரான சமத்துவ நாயகரான " பசும்பொன்னார்.உ.முத்துராமலிங்கத்தேவரின் " தேசியமும் தெய்விகமும் கலந்த ஆன்மிக மண்ணுங்க எங்கள் ஊர்...
அப்படினா சாதி வெறி பிடித்த ஊரா..? உங்க ஊருனு கேட்க தோனுமே..!
அதுதாங்க இல்லை..
தென் மாவட்டத்தில் அமரன் பாட்டு ஒலிக்காத ஒரே கிராமம் மேலக்கலங்கல் தாங்க..கோவில் திருவிழானும் சரி.மற்ற சுபகாரிய நிகழ்ச்சினாலும் தேவர் பாடல்கள் நாங்கள் ஒலிபரப்புவதில்லை....
எங்க ஊர்ல மாவீரன் கட்டத்துரைத்தேவர் போர்டு வச்சதற்கே எங்க ஊர் பெருசுக போர்டை அகட்டை சொல்லி சண்டைக்கு வந்தாங்கனா..பார்ங்கலேன்..
இது எங்க மூதாதையர் வளர்ப்புங்க அது..
சைவ திருவிழானு சொன்னிங்களே ..ஆமா சொன்னேன் உடலை வருத்தும் நேர்த்திகடன்கள்தான் இல்லையே தவிர..
வீட்டுக்கு ஒரு கிடானு நேந்து விட்டு வளர்த்து150 க்கு மேற்பட்ட கிடாக்களை வெட்டி 10 நாள் உப்புக்கண்டம் போட்டு சும்ம அசைவத்தை பட்டைய கிளப்பிருவோம்லே..
ஆனா ..இப்ப உப்புக்கண்டமெல்ல கிடையாதுங்க..
கழுதை நாகரிகம் வளந்து போச்சுங்க..
சரி நாளைக்கு வாங்க.. அம்மன் கொடையை பார்ப்போம்..
தொடரும்..
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

