ஸ்வீட் எடுத்துக்கொள்ளவும்

ஒருத்தருக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாய் இருக்குன்னு ஒரு பிரபல ஸ்வீட் கடைக்குத் தனது ஃபோனில் தொடர்பு கொண்டார்...
'எனக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாய் இருக்கு உங்களிடம் என்னென்ன வகை இருக்கு"-ன்னு கேட்டார்.
பதில் வந்தது...
🍪 லட்டுக்கு எண் 1-ஐ அழுத்தவும்,
🍡 பூந்திக்கு எண் 2-ஐ அழுத்தவும்,
🍧 அல்வாவுக்கு எண் 3-ஐ அழுத்தவும்,
🍚 கேசரிக்கு எண் 4-ஐ அழுத்தவும்,
🍨 குலோப்ஜாமூன் வாங்க எண் 5-ஐ அழுத்தவும்,
🍭 ஜிலேபிக்கு எண் 6-ஐ அழுத்தவும்,
🍧இவர் எண் 3-ஐ அழுத்தினார்.
பதில் வந்தது...
🍧 கோதுமை அல்வாவுக்கு எண் 1-ஐ அழுத்தவும்,
🍧 பாதாம் அல்வாவுக்கு எண் 2-ஐ அழுத்தவும்,
🍧 பால் அல்வாவுக்கு எண் 3-ஐ அழுத்தவும்,
🍧 ரவா அல்வாவுக்கு எண் 4-ஐ அழுத்தவும்,
இவர் எண் 1-ஐ அழுத்தினார்.
பதில் வந்தது...
🍧 பசு நெய்யால் செய்த அல்வாவுக்கு எண் 1-ஐ அழுத்தவும்,
🍧 டால்டாவால் செய்த அல்வாவுக்கு எண் 2-ஐ அழுத்தவும்,
🍧 சாதாரண நெய்யால் செய்த அல்வாவுக்கு எண் 3-ஐ அழுத்தவும்,
🍧 பாமாயில் ஆயிலில் செய்த அல்வாவுக்கு எண் 4-ஐ அழுத்தவும்,😬
இவர் எண் 1-ஐ அழுத்தினார்.
பதில் வந்தது...
🔢 கால் கிலோ வேண்டுமென்றால் எண் 1-ஐ அழுத்தவும்,
🔢 அரை கிலோ வேண்டுமென்றால் எண் 2-ஐ அழுத்தவும்,
🔢 முக்கால் கிலோ வேண்டுமென்றால் எண் 3-ஐ அழுத்தவும்,
🔢 ஒரு கிலோ வேண்டுமென்றால் எண் 4-ஐ அழுத்தவும்,
🔢 நூறு கிலோ வேண்டுமென்றால் எண் 9-ஐ அழுத்தவும்,
இவர் எண் 9-ஐ அழுத்தி விட்டு ஃபோனை ஸ்விச் ஆஃப் செய்து விட்டார்...😜
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஃபோனை ஆன் செய்த உடனே...
'அங்கிருந்து" மீண்டும் அழைப்பு வந்தது...
'நீங்கள் தானே ஆர்டர் செய்தீர்கள்?"
'ஆம் இது என்னுடைய ஃபோன் தான்... ஆனால் ஆர்டர் செய்தது நான் அல்ல... என் வீட்டில் இருக்கும் உடன்பிறந்தவர்கள் யாராவது செய்திருப்பார்கள்"...
எனவே நீங்கள்
👬 என் பெரிய அண்ணனைத் தொடர்பு கொள்ள எண் 1-ஐ அழுத்தவும்,
👬 என் சிறிய அண்ணனை தொடர்பு கொள்ள எண் 2-ஐ அழுத்தவும்,
👬 என் தம்பியை தொடர்பு கொள்ள எண் 3-ஐ அழுத்தவும்,
👬 அடுத்தத் தம்பியை தொடர்பு கொள்ள எண் 4-ஐ அழுத்தவும். 😳😳
அந்தப்பக்கம் டமால்னு ஒரு சத்தத்துடன் தொடர்பு அறுந்து போனது.
யாருகிட்ட...
யாருக்காவது அல்வா வேணுமா

எழுதியவர் : நா தியாகராஜன் (28-Jul-23, 6:43 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 97

மேலே