இலவசம் ஏற்க இழிவு சேர்த்திடும்
இலவசம் ஏற்க இழிவு சேர்த்திடும்
********
( கலித்துறை)
( புளிமா விளம் விளம் விளம் மா)
இழிவு சேர்த்திடும் தற்கால இலவசம் ஏற்க
அழியு மாமினம் உழைத்திட வாய்ப்புகள் அன்றி !
ஒழியா இன்னிலை தொடரவே உழைப்பதும் ஓய்ந்து
பழியுஞ் சாருமாம் தரணியில் பாமரன் தனக்கே !
*****
(மருத்துவர் வ. க. கன்னியப்பன் ஐயா அவர்களின்
" இலவசம் என்றும் இழிவு " என்ற நேரிசைவெண்பா
வின் தாக்கம் இப்பதிவு.