பெரியமனங் கொண்டவரும் பேதலிப்ப தில்லை - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 3 / தேமா)
பெரியமனங் கொண்டவரும் பேதலிப்ப தில்லை;
பரிமளித்து வாழ்ந்திடுவார் பரிதவிப்பு மில்லை!
பெருந்தகைமை வாய்ந்திருந்தால் பிறகேது தொல்லை;
பெரும்பொழுது நன்மைசெய்வார் பேதமின்றி நன்றே!
- வ.க.கன்னியப்பன்