கடமையைச் செய்வாய் தம்பி - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
கடைகளில் வாங்கித் தின்று
..காசைவீ ணாக்கல் தீது
தடைபோட்ட பெற்றோர் தாமே
..தன்பிளைக் கறிவு மூட்டி
நடைபோட்டார் பெண்பார்க் கின்றேன்
..யாமுளோம் உதவிக் கென்று
கடமையைச் செய்வாய் தம்பி
..காட்டினர் வழியும் நன்றே!
- வ.க.கன்னியப்பன்
திரு. மெய்யன் நடராஜ் அவர்களின் ‘பெண் பார்க்க’ என்ற பாடலைத் தழுவி...