வேண்டினனென் னுள்ளே விடிவு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் பொழிப்பு மோனை)
பெண்ணவள் செவ்விதழ் பித்துக் கொளவைக்க
வெண்முத்துப் பற்களும் வேட்கையைக் - கண்களிலே
தூண்டிவிட என்னுளே தூக்கமும் போச்சுதே;
வேண்டினனென் னுள்ளே விடிவு!
- வ.க.கன்னியப்பன்