அமைதி நோயாளி
நோயற்ற வாழ்வு வாழ்ந்திடவே
எல்லோரும் விரும்புகிறோம்
விருப்பங்கள் யாவும்
நம் எண்ணம் போல்
வாழ்வில் நிறைவேறுவதில்லை
அழையா விருந்தாளியாக
சில நோய்கள் நம்மிடம்
தஞ்சம் கேட்டு வந்து
திண்ணையில் உட்கார்ந்து
சென்று விடுகிறது
சில நோய்களோ
ஆயுட்காலம் முழுவதும்
வண்ண வண்ண
மாத்திரைகளை
உணவுக்கு முன்னும்
உணவுக்கு பின்னும்
சாப்பிட வேண்டுமென்று
மருத்துவர்கள் பரிந்துரைக்க
நம்மோடு ஆரவாரமின்றி
நோய்கள் அமைதியாக அனுமதியில்லாமல்
தங்கி கொள்கிறது.
மனிதனும் வேறு வழியின்றி
"அமைதி நோயாளி" யாக
காலம் முடியும்வரை
வாழ்கின்றான்....!!
--கோவை சுபா