குங்குமப்பூ புன்னகைக்காரி
அவள் முதல் முதலாய்
மலரும் விழியால் எனைப்
பார்த்தாள் அந்த பார்வை
என்னுள்ளத்தில் மின்னலாய்ப் பாய்ந்தது
பொங்கிடும் காதலால் என்னுள்ளம்
இன்பத்தின் எல்லையைத் தொட்டது
பொங்கும் பால் தித்திப்பதுபோல்
இப்போது அவள் பார்வையோடு
புன்னகையும் தந்திட அது
பாலில் கலந்த குங்கமப்பூப்போல்
உள்ளத்தில் தனி மணம் சேர்த்தது
காதல் மணம் தந்த புன்னகையானது
குங்குமப்பூ புன்னகைக்காரி அவள்
என் அருமைக் காதலி