நீலநிற வானில் நிலவு வரும்போது

நீலநிற வானில் நிலவு வரும்போது
மாலையின் தென்றலும் மௌனமாய் வீசிட
சேலைச் சிவப்பினில் செந்தா மரைபோல்வா
சோலை இளம்நறும் பூ


மாலையின் தென்றலும் மௌனமாய் வீசிட
நீலநிற வானில் நிலவுவர --நூலிடையே
சேலைச் சிவப்பினில் செந்தா மரைபோல்வா
சோலை இளம்நறும் பூ

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-23, 8:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே