விடுதலை வேட்கை
விடுதலை வேட்கை
××××××××××××××××××
விடுதலை வேட்கையிலே
விவேகமும் உண்டன்றோ/
வீரர்களின் தியாகத்தில்
வீரமும் தெரிகிறதன்றோ/2
வியபாரம் செய்திடவே
வெள்ளையனும் வந்திடவே/
வீழ்ச்சியான ஒற்றுமைகண்டு
சூழ்ச்சியும் செய்தானன்றோ/4
வானத்தை அபகரிக்கும்
வாகனத்தின் புகையாக/
வளமானப் பாரதத்தை
வளைத்தானே அயலகன் /6
விளைகின்றப் பொருளை
வரியாகக் கேட்டிடவே/
வெகுண்டெழுந்த மன்னர்களும்
வரிகட்ட மறுத்திடவே /8
வென்அரிசியில் கலந்திட்ட
வென்கல்லாக மன்னர்களுள்/
வாழ்ந்திட்ட எட்டப்பர்களால்
வீழ்ந்தனரே மாமன்னர்களும்/10
வலிமையானப் படைபல
வெள்ளையனும் வைத்திருக்க/
வெள்ளையென வெளியேறுயென
வீரமுழக்கமிட்டக் காந்தியர்/12
விவேகமான அகிம்சை
வழியில் வாளில்லா
அறப் போரட்டம்
அடக்கியதே அந்நியனை/14
வாலிபரை ஒன்றினைத்து
விடுதலைக்கு நேதாஜி/
வலிமையான வீரர்களை
விடுதலைக்குப் படையமைத்து/16
வெள்ளையர் படைகளை
வீரர்கள் சிதைத்திடவே/
வீரமில்லா வெள்ளையோனோ
விடுவித்தான் பாரதத்தை /18
வெளிச்சமற்ற இந்தியாவின்
விடிவெள்ளிதான் பாரதியும்/விதந்தருகோடி இன்னல்
விளைந்தென்னை அழித்திட்டாலும்/20
சுதந்திரதேவி நின்னை
தொழுதிடல் மறக்கிலோனே /
விடுதலை வேட்கையை
வரியால் எழப்பிடவே/22
வீரர்கள் குருதியால்
வித்திட்டச் சுதந்திரம்/
வடுவாகி நின்றிடுமே
வளந்தருமே நமக்கன்றோ/24
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்