புன்னகையால் சம்மதம் சொல்லடி
புன்னகையால் சம்மதம் சொல்லடி
××××××××××××××××××××××××××××××
நான்முகச் சிங்கமாக
நான்கு கண்களும்
இன்முகம் பார்த்தே
இன்னிசை பாடட்டுமே
புல்லாங்குழல் தமிழிசையாக
புன்னகையால் தமிழுரைக்க
எல்லையில்லா இன்பத்தில்
எக்குதப்பாக நாடித்துடிக்குமே
கரையைக் கடக்கும்
கடல் காற்றாக
உரைத்திடு நாணத்தை
உடைத்து சம்மதமென
பங்குனி வெயிலிலும்
பனித்துளி மின்னுவதாக
மங்குனிக் காதலியே
மாங்கனியாக கனிந்திடு...
இரவில் உன் கூந்தல்
காட்டில் விலங்குகளாக
விரல்கள் பத்தும்
விளையாடத் துடிக்குதே...
இடைச் சுருக்க
இடையின் தேனை
உடைவிலக்கி உண்டிட
உதடும் துடிக்குதே....
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்