இல்லை சுதந்திரம்
.........இல்லை சுதந்திரம்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
அரசியல்வாதியின் ஊழல் பணத்திற்கு
அமலாக்க துறையிடம் இல்லை சுதந்திரம்
சாதிக்காக ஆயுதம் ஏந்த
மாணவனுக்கு இல்லை சுதந்திரம்.
பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க
வேட்பாளருக்கு இல்லை சுதந்திரம்.
ரேசன் அரிசியை எடுத்துச் செல்ல
கடத்தல்காரனுக்கு இல்லை சுதந்திரம்.
மக்கள் மகிழ்ச்சிக்கு போதைப்பொருள் விற்க
கஞ்சா வியாபாரிக்கு இல்லை சுதந்திரம்.
முதலீட்டாளருக்கு மோசம் செய்ய
நிதி நிறுவனத்திற்கு இல்லை சுதந்திரம்.
நீண்ட ஆயுளுடன் ₹2000 மாக வாழ
காகிதத்திற்கு இல்லை சுதந்திரம்.
இலஞ்சம் வாங்கி வேலை செய்ய
அரசுத் துறைகளில் இல்லை சுதந்திரம்.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳