துவண்ட ரோசா மொட்டு

அழகிய ரோசா மொட்டு
மலர்ந்தும் மலராது போனதேனோ
பொலிவு இழந்து வாடியதேன் ?
நேற்றடித்த காற்றில் வந்து
ரோசா மொட்டைத் தாக்கியதோ
கண்ணிற்கு தெரியா கிருமி ஏதோ ?

அதோ தெருவோரம் கிடக்கிறாள்
கன்னிகழிக்கப்பட்ட பாவை
மலர்ந்து மலராத 'கன்னியாய்;
நோய்வாய்ப்பட்ட ரோசா போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Sep-23, 7:47 am)
பார்வை : 869

மேலே