aruthal
ஆறுதலை தேடியே
அலைந்த மனதிற்கு
ஆதரவாய் பேசியே
உண்மையை புரிய வைத்தாய் .
நீ எனக்கு
உறவும் இல்லை
உற்றாரும் இல்லை
முன் ஜென்ம தொடர்ச்சியோ,
என் தந்தையின் மறு பிறப்போ
என் உடன் பிறவா சகோதரனோ
எதுவென்று தெரியவில்லை.
இதில் ஏதுவாகிலும்,
நீ என் நலம் விரும்பி.
இனிமேல் நமக்கு யாரும்
வேலை தர மாட்டார்கள்
இந்த உலகத்தில்
திறமைக்கு வேலை
இல்லை என்று
மொத்த நம்பிக்கையையும்
இழந்து நின்ற நேரம்
கடவுளின் மறு உருவமாய்
நீயே வந்து நின்றாய்
என் திறமைகளை தூசு தட்டி
புது உலகை கட்டியவன் நீ
திக்கு தெரியாமல்
இருந்த எனக்கு
வழி காட்டியவன் நீ.
தெரியாமல் நான் செய்த
பிழை பொறுப்பாய்.
ஊக்கம் அளித்தவன் நீ
உதவி செய்தவன் நீ
உயர்வை அளித்தவன் நீ
நன்றி கடனாய் உனக்கு அளிக்க
என் உழைப்பை தவிர வேறு
ஏதும் என்னிடம் இல்லை
நிச்சயம் அதை கொடுப்பேன்
இது என் மேல் ஆணை.