குரு வணக்கம்

டீச்சர் வணக்கம்...
நீங்க கற்றுக்கொடுத்தீர்கள்
நான் கற்றுக்கொண்டேன்
புதிய உயரத்திற்கு ஏற்றிவிட்டீர்கள்
நான் ஏறிக்கொண்டேன்
தமிழ் கற்பித்தீர்கள்
அதன் வழியாக கவிஞனானேன்
திருக்குறள் சொன்னீர்கள்
அதன் வழியாக ஒழுக்கம் கற்றேன்
சமூகநூல் சொன்னீர்கள்
அதன் வழியாக சமூகத்தை அறிந்தேன்
கணக்கு கற்பித்தீர்கள்
அதன் வழியாக வாழ்க்கையின்
கணக்குகளை அறிந்துகொண்டேன்
கல்லாக உங்களிடம் வந்தேன்
கலைநயம் மிக்க சிலையாக்கினீர்கள் என்னை
சிலையாக உருமாறியதில் பெருமையில்லை எனக்கு
*நளினி டீச்சர்*
உங்களின் பாதம் தாங்கும் படிகல்லாக இருப்பதில் தான் பெருமை எனக்கு...

என்றும் பணிவுடன்
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Sep-23, 5:32 am)
Tanglish : guru vaNakkam
பார்வை : 2454

மேலே