வெற்றி

அளவில்லா பெரு மகிழ்ச்சி அடைந்தேன்
ஆசிரியரான எனக்கு
நல்லாசிரியர் விருதை
நான் விரும்பும்
தாசிம் பீவியின்
மாணவிகளின்
பலத்த கைதட்டல்கள் மூலம் பெற்றேன்.....
இரண்டு ஆண்டுகள் மட்டுமே சென்றது
ஆம் என் பணிக்காலம் தாசிம் பீவியில்
இரண்டு ஆண்டுகள் தொட்டது......
ஆனால் இரண்டாயிரம் மாணவிகளின் மனமாளிகையில்
இடம் பிடித்தது என்பது கடவுளின் கிருபையால்...
அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்
சிறப்பு விருந்தினரும் வியந்த தருணம்...
ஆம் மாணவிகளின் கைதட்டல்களுக்கு
பாத்திரமான இந்த ஆசிரியரின் சாதனை என்ன என்று வியந்த தருணம்...
ஒட்டு மொத்த கல்லூரி மாணவிகளின் பலத்த கை தட்டல்கள்
தந்தது பல ஆயிரம் கலோரிகளை
ஆம் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்ணாமலேயே
பெற்றேன் என் மாணவிகளின் அன்பை....
அளவில்லா மகிழ்ச்சி
மேலும் அதிகரிக்கும்.....
தொடர்ந்து பணியாற்றுவேன்
நல்லாசிரியராக.......
வேலையை திணித்தனர் பலவிதமாக
திணித்தவர்கள் திண்டாடினர்
செய்த வேலைக்கு பாராட்டு கிடைத்தபோது
கடவுளிடம் சரணடைந்தால்
யாரிடமும் தோற்றுப்போக முடியாது....
அடைந்தேன் கடவுளிடம் சரண்
வெற்றி பெற்றேன்…

எழுதியவர் : முனைவர் ஆ.கிருஷ்ணவேணி (5-Sep-23, 6:50 pm)
Tanglish : vettri
பார்வை : 38

மேலே