விதியின் சதி
மறைந்திருந்து ஆட்டுவிப்பவன் ஒருவன்
அண்டத்தின் அத்துணை உயிர்களும்
அவன் கரங்களின் பொம்மைகள்
அறிந்திருந்தும் இவற்றை, அகங்காரம்மிக
ஆடுகிறான் தலைகால் புரிந்திடாமல்....
பிரளயம் எழுந்தால் ஆட்டுவிப்பவன்
மனதினில், மீண்டும் சுனாமியாக
உருவெடுத்து உருகுழையும் உயிர்கள்
ஆனால் அகங்கார ஆட்டம் ஆடுபவன்
ஆறறிவு அழிவிற்கு உட்படுவது
ஐந்தறிவும் விதியின் சதியோ?
கவிபாரதீ ✍️