வாடிடும் பூவினின் வாட்டம் நீக்கும் விரல்கள்

ஓடிடும் நீரோடையில் துள்ளிடும் மீன்கள்
ஆடிடும் கொடியில் அசைந்திடும் மலர்கள்
வாடிடும் மலர்வாட்டம் நீக்குமுன் விரலின்தொடல்
பாடிடுமதை தென்றலுடனென் தேன்தமிழ்ப் பூங்கவிதை


ஓடிடும் நீரோ டையில்துள் ளிடும்மீன்கள்
ஆடிடும் கொடியில் அசைகின்ற மென்பூக்கள்
வாடிடும் மலர்வாட் டம்நீக்கும் விரல்தொட்டால்
பாடிடும் தென்றல் என்தமிழ்த்தேன் பூங்கவிதை

ஓடிடும் ஓடையில் ஓடும் ஒளிமீன்கள்
ஆடிடும் பூங்கொடியில் ஆடிடும் மென்பூக்கள்
வாடிடும் பூவினின் வாட்டம்நீக் கும்விரல்கள்
பாடிடும்தென் றல்கவி தை

ஓடிடும் ஓடையில் ஓடும் ஒளிமீன்கள்
ஆடிடும் பூங்கொடியில் ஆடிடும்பூ --தேடிவந்து
வாடிடும் பூவினின் வாட்டம்நீக் கும்விரல்
பாடிடும்தென் றல்கவி தை

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-23, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே