அப்பா

அப்பா
தன் பிள்ளைகளிடத்தில்
மூடி மறைப்பதில் மன்னன்
தன் மன வேதனையை
தன் சோதனையை
தன் பற்றாக்குறையை
தன் கண்ணீரை
தன் உறக்கமில்லாத இரவை
தன் வலிமைக்கு மீறிய உழைப்பை
தன் பிள்ளைப் பாசத்தை
அப்பா மூடி மறைப்பதில்
ஒரு மா மன்னன்..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (5-Oct-23, 8:48 am)
Tanglish : appa
பார்வை : 1903

மேலே