பாவம் என் அக்கா

பாவம் என் அக்கா.

மாப்பிள்ளைக்கு.......
கை நிறைய சம்பளம்
சொன்னது நான் அல்ல
சொன்னது கல்யாண தரகர்
நம்பியது நான் அல்ல
நம்பியது என் பெற்றோர்

குணத்தில் தங்கம்
குடிப்பழக்கம் கிடையாது
சொன்னது நான் அல்ல
சொன்னது தரகர்
ஏமாந்தது நான் அல்ல
ஏமாந்தது என் பெற்றோர்
வாழ்வை தொலைத்தது
அவர்கள் அல்ல
தொலைத்தது என் அக்கா
பாவம் அவள்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (5-Oct-23, 3:21 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : paavam en akkaa
பார்வை : 63

மேலே