விவசாயம் செய்வோம்

விவசாயம் செய்வோம்
++++++++++++++++++++
விவசாயம் செய்திட வேண்டும்-நாட்டில் /
வேலையில்லை என்ற நிலை வரவேண்டும் /

மண்வளம் காத்திட வேண்டும்-இயற்கையான /
மாட்டுச்சாணம் மக்கியகுப்பைகள் பயண்படுத்த வேண்டும் /

மரபுமாற்று விதைகள் தவிர்க்க வேண்டும் /
மக்களிடம் நோயில்லை என்றநிலை வரவேண்டும்/

பூமியை துளையிடுவதை நிறுத்த வேண்டும் /
நீர் நிலைகளை காத்திட வேண்டும் /

தரகர்களிடம்மிருந்து விவசாயிகளை காத்திட அரசு /
தரமான திட்டங்கள் கொண்டு வரவேண்டும்../

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (7-Oct-23, 6:09 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vivasaayam seivom
பார்வை : 300

மேலே