புள்ளிமானும் பாயும் புலியும்

துள்ளித் திரியும் புள்ளிமான்
துள்ளித் துள்ளிப் போனது
கானகத்தில் ஒரு நீர்த்தேக்கம்
புல்லை மேய்ந்த மான் தாகம்
தீர்க்க அங்கு வந்து சேர்ந்தது
கொஞ்சம் நீர்ப் பருக எங்கிருந்தோ
பாய்ந்து வந்த புலி மானை நெருங்க
மருண்ட மான் பயத்தால் துள்ளி ஓடியது
ஓடிப் பயனிலை ....கவ்விக் பிடித்தது
பாயும் புலி புள்ளிமானின் கழுத்தை
செயல் இழந்த மான் பாவம்
புலிக்கு இப்போது முழு சரணம்...
ஒரே இழுப்பில் மானின் உயிரைக் குடித்தது புலி
செத்தது மான்.....புலி தன் தோளில் வைத்தது
தூக்கி சென்றது தன் இருக்கைக்கு ....

இத்தனையும் தொலைவில் இருந்து பார்த்தேன்
என் கண்முன்னே இப்போது இரண்டு உருவங்கள்
அழகே உருவாய் துள்ளி திரிந்த புள்ளி மான்..
அந்த ராக்கத பாயும் புலி....

எண்ணத்தில் ஓடியது ஓர் சிந்தனை
இந்த கண்குளிரவைத்த அழகிய மானைப்
படைத்தவனா இந்த கொடூரமான புலியையும் படைத்தான்!
மானுக்கு புல்லை இறையாக வைத்தவன்
புலிக்கும் ஏன் அதையே வைக்க மறந்தான் !

---------------------

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Oct-23, 6:11 am)
பார்வை : 60

மேலே