ஆடிப்பட்டம் விதை விதைத்து

ஆடிப்பட்டம் விதை விதைத்து
×××××××××××××××××××××××××××××
மச்சக்காளை  கழுத்துமீது கலப்பை பூட்டி
மச்சினி கை ரேகையாக உழுதே

தங்கக் கட்டி பாத்தி கட்டி
தகதக மின்னும் வான் நட்சத்திரமாக

ஆடி பட்டம் தேடி பார்த்து
அழகு சம்பா நெல் விதைத்து

தலைகுனியும் நெல்மணியை பாரதி கண்ட
தலைநிமிர்ந்ந பெண்கள் அறுவடை செய்தே

களத்து மேட்டில் கதிர் அடித்தால்
கண்ணகி சலங்கை முத்துக்கள் சிதறுவதாக

நெல் மணிகள் சிதறி விழுந்திடவே
நெஞ்சம் நிறைந்து கொண்டாடுவான் உழவனுமே

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Oct-23, 3:54 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 143

மேலே