இரித்தியா திரித்தியா

அக்கா, உன்னோட பொண்ணுக்கு ஏன் 'கிரித்தியா'னு பேரு வச்சீங்க? அது இந்திப் பேரா?
@@@@@@
இல்லடி. பெரும்பாலானவர்கள் 'கிருத்திகா'ங்கிற பேரை அவங்க பிள்ளைகளுக்கு வச்சிருக்கிறாங்க. எங்க பொண்ணும் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவள் தான். வித்தியாசமான பேரா இருக்கட்டுமேனு 'கிரித்தியா'ங்கிற பேரை நாங்களே உருவாக்கி வச்சோம். அதை இந்திப் பேருன்னு நினைச்சு அந்தப் பேரை நிறையப் பேர் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்கிறாங்க.
@@@@#@@@
சரிக்கா. என்னோட இரட்டைப் செல்வங்களுக்கு அது மாதிரி பேரு இரட்டைச் சொல்லுங்க.
@@@@@@##@
அடி போடி. இது ஒரு பெரிய பிரச்சினையா?
'இரித்தியா', 'திரித்தாயா'. இந்தப் பேருங்கள வச்சிடு. இந்த பேருங்கள கேட்கிறவங்க எல்லாம், " அடடா அருமையான இந்திப் பேருங்க. ஸ்வீட் நேம்ஸ'னு சொல்லிப் பாராட்டுவாங்க.
@@@##@@
அருமை. அருமையான பேருங்க அக்கா. நீ ரொம்ப அறிவாளி அக்கா.