வாடகைத் தாய்

வாடகைத் தாய்
××××××××××××××××
ஊர் விட்டு ஊர் தாவும் பயணிகள் நிறைந்த பேருந்தில் ரஜினி படமான முள்ளும் மலரும் படத்தின் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலில் பேருந்து அதிர .
பேருந்தை இயக்கும் ராமன் கல்லூரி பயிலும் ருக்மணியைப் பார்வையில் காதல் வலை வீச பாடலின் வரிகளோடு காதலும் வளர்ந்தது மறவேன் மறவேன் அற்புதக் காட்சி என்று பாடல் முடிந்தது காதல் துவங்கியது .

இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் இனிதே முடிந்தது

காலங்கள் கரைந்தது இல்லத்தில் குழந்தைச் சத்தம் கேட்க வில்லை

மருத்துவப் பரிசோதனையில் ருக்குமணிக்கு கர்ப்பப்பையின் வளர்ச்சி சிறிய அளவில் இருப்பதால் கர்ப்பமாக வாய்ப்பு இல்லை

வேறு வழியாக வாடகைத் தாய் மூலமாக உங்கள் குழந்தையை பெறலாம் அல்லது தத்து எடுக்கலாம் என்றார் மருத்துவர்

ராமன் வாடகைத் தாய் மூலமாக தன் குழந்தையைப் பெற்றுக் கொள்ள சம்மதித்தான்

தர்மத்தில் சிறந்தது அன்னமிடுதல் ,கண், குருதிக் கொடை,உடல் உறுப்பு தானம் இவை அனைத்தும் கலந்து அனைத்திற்கும் மேலாக வாடகைத் தாயாகக் குழந்தைப் பெற்றுக் கொடுக்கும் தானமே சிறந்தது.

வாடகைத் தாயாக வீரலட்சுமி என்ற பெண்ணிடம் முறையான ஆவணங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு கையெழுத்து வாங்கியப் பின்
அவள் கர்ப்பப்பையில் கரு செலுத்தப்பட ஈர்ஐந்து மாதங்களில் கருவைக் குழந்தையாக வீரலட்சுமி பெற்றெடுத்தாள்

ருக்மணியிடம் வீரலட்சுமிக் குழந்தையைக் கொடுத்தாள் ருக்மணிக் கண்ணீல் நீர் பெருக வீரலட்சுமிக் காலில் விழுந்து வணங்கினால்

குழந்தைப் பாக்கியம் தருவதில் தெய்வங்கள் ஏமாற்றலாம்
வாடகைத் தாயான தெய்வங்கள் குழந்தை வரம் கொடுக்கத் தயங்காது ! ஏமாற்றாது !!

செல்வத்துற் செல்வம் மழலைச் செல்வம் அச்செல்வத்தை தரும் வாடகைத் தாயாக சம்மதிக்கும் பெண்களைத் தெய்வமாக வணங்குவோம் ....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (2-Nov-23, 3:53 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vaadakaith thaay
பார்வை : 200

மேலே