மாறும் உலகில் மாறாதது பசி

மாறும் உலகில் மாறாதது பசி

காசை சுண்டிடப்
பூவோத் தலையோ /
எது விழுமென்று
அறியா சுண்டியவனைப்போல் /

படைத்தவன் அறியான்
பணக்காரன் ஏழையை /
செல்லும் பாதை
ஏற்றமோ இறக்கமோ /

அமையும் பயணம்
அவரவர் அறிவைச்சாரும் /
முன்னேற்றம் காண
முயற்சி எடு /

வறுமை அரக்கனை
வதம் செய்தால் /
மாறும் உலகில்
மாறும் பசி/

கையேந்தும் நிலைமாற
கரம் கொடுத்தால் /
இல்லாமை இல்லாத
நிலை மாறும் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (3-Nov-23, 4:45 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 75

மேலே