வசியம் செய்துவிடும்

வண்ண மலர்ச் சோலையில்
வானத்தைத் தொடுவது போல்
வந்து அமர்ந்து
வீற்றிருக்கும் பூக்கள்
வீசும் காற்றால்
விளையாடி மகிழும்
வாசத்தை வாரி வழங்கி
வந்து இரசிப்பவரை
வசியம் செய்துவிடும்

எழுதியவர் : கோ. கணபதி (26-Nov-23, 9:11 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vasiyam seithuvidum
பார்வை : 47

மேலே