தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
________________________________________

பிரம்மாவை நோக்கி
பக்தியில் இரண்யன் /
கடும் வனத்தில்
கடும் தவமிருந்து /

இறப்பு மனிதனால்
இரக்கமற்ற மிருகத்தால் /
இரவில் பகலில்
இரும்பு ஆயுதங்கள்/

இறப்பு நிகழா
இவ்வரம் பெற்று /
இறைவன் தானென்று
இன்னாது செய்திட /

இரண்யன் மகன்
இளையோன் பிரகலாதன்/
இறைவன் நாராயணனை
இடையில்லாது வணங்கிட /

இரண்யன் சினத்துடன்
இனிய மைந்தனை /
இடர்கள் செய்திட
இந்திராபதிக் காத்தான் /

இரண்யன் மைந்தனிடம்
இறைவன் நாராயணன் /
இருக்கும் இடத்தை
இகழ்ச்சியாகக் கேட்டிட /

தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் /
துடிப்புடன் பிரகலாதன்
துணிவாக சொல்ல /

அந்தி மாலையில்
அவனது கதாயுத்தால் /
அவ்விடத் தூணை
அகங்காரத்தில் பிளந்தான் /

நாராயணன் எழுந்தார்
நரசிம்மர் அவதாரமாக /
நாராயணன் இரணியனை
நகத்தால் குடல்கிழித்தார் /

பக்தனை காத்திட
பெருமாள் அவதரித்த/
பூகர்ப்பத்தில் உத்பவித்த
பெருமையான அவதாரம்/

சமத்துவப் புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Nov-23, 6:30 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 127

மேலே