பாசம்

பாசம்
×××××
செடியொன்றின் மலர்களாக
கொடிதந்த உறவாக
மடிதாங்கும் அக்காவும்
மற்றோர் தாயாவள் பாசத்தாலே

பாசம் காட்டிட
பணத்தை காணாதே
வசமாகும் அதீதபாசம்
விரிசலானால் வேதனை யாகுமே

காதலினும் பெரியது
காட்டிடும் பேரன்பு
மோதல் தவிர்த்து
மானுடம் ஒன்றயாகுமே

நிலையற்ற பூமியில்
நிலையானது பாசம்
சேலையின் நூலாக
சொந்தங்களை இணைக்குமே

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Nov-23, 9:51 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : paasam
பார்வை : 74

மேலே