நலமே வாழ்க நண்பனே என்றும்

நலமே வாழ்க நண்பனே என்றும்
×××××××××××××××××××××××××××××
நலமே வாழ்க
நண்பனே என்றும்
பாலமாகும் உறவுக்கு
பாசமிகு விலங்கு

வாலட்டும் நன்றிடன்
தாலட்டும் அன்புடனே
காலட்டி வணங்கியே
காலமெல்லம் உடனிருக்குமே

பணத்துக்கு மயங்காது
பிரித்தாலும் மறவாது
குணத்துக்கு ஈடுயேது
குரைத்தால் திருட்டுயேது

காவலுக்கு கெட்டிக்காரன்
கருணையுள்ள மனசுக்காரன்
சேவகனாக இருப்பவன்
சேர்ந்தே வருபவன்

நன்றிகெட்ட மானிடரை
நாயேயென அழைத்தே
நாயின் புனிதத்தை
நாவால் இழித்துரைக்கிறோம்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (9-Dec-23, 8:26 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 308

மேலே