புத்துணர்வு கள்

புத்துணர்வுகள்

மனதில் ஒரு வித உணர்வு
பள்ளி செல்வது போன்றும்
பட்டம் பறக்க விட்டு
பார்த்து மகிழ்வது போன்றும்
மனதில் ஒரு வித புத்துணர்வு

சக்கரம் ஓட்டி விளையாடி
மகிழ்வது போன்றும்
மாமரத்தில் ஏறி மாங்காய்
பறித்து உண்பது போன்றும்
மனதில் ஒரு இளமைக் காற்று

ஆண்டவன் அணைப்பது போன்றும்
அவனுடன் உள்ளம்
ஒன்றாய் கரைவது போன்றும்
மனதில் ஓர் பெரும் ஒளி விளக்கு

இந்த உணர்வுகளை எல்லாம்
2024ல் தினம் தினம் இறைவன்
உங்களுக்கு அள்ளி வழங்கட்டும்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (1-Jan-24, 10:13 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 63

மேலே